ஜனாதிபதி கோட்டாபயவின் இந்திய விஜயத்தை கண்டித்து போராட்டம் நடத்திய வைகோ கைது

Report Print Varun in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை கண்டித்து புது டில்லியில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மதிமுக கட்சியின் பொது செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

புது டில்லி நகரில் வைகோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அச்சமயம் இந்திய பொலிசார் வைகோவை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

குறித்த போராட்டத்தின் போது கறுப்பு கொடி அணிந்து வைகோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தார் .

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இன்றையதினம் இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜத்தினை மேற்கொண்டார்.

அவர் ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்ததை அடுத்து மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.