எங்களுக்கு தலைவர்கள் என்றால் இருவர் மட்டுமே! கிழக்கில் பேசிய உறுப்பினர்

Report Print Varunan in அரசியல்

எங்களுக்கு தலைவர் எவரும் சபையில் இல்லை எனவும் தலைவர்கள் என்றால் பிரபாகரனும் சம்பந்தனும் தான் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வு வியாழக்கிழமை(28) கல்முனை நகர மண்டபத்தில் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

அண்மையில் சபையில் பாதீடு நிறைவேற்றப்பட்ட பின்னர் அது தொடர்பில் முன் எடுத்துக்கொள்ளப்பட்ட கூட்டறிக்கை தொடர்பாக உறுப்பினர்களிடையே இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களிடையே முதல்வர் தெரிவித்த கருத்திற்கு மறுதலித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது பேசிய மாநகர சபை உறுப்பினர், எங்களுக்கு இங்கு தலைவர் எவரும் இல்லை. தலைவர் என்று சொன்னால் பிரபாகரன் மற்றும் சம்பந்தனும் தான். முதல்வரே இங்கு சபைக்கு எவரும் எங்களுக்கு தலைவர் கிடையாது என கூற விரும்புகின்றேன் என குறிப்பிட்டார்.