ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எவ்வித பிளவும் இல்லை! ரஞ்ஜித் மத்தும பண்டார எம்.பி

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவிதப் பிளவும் இல்லை என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை, அடுத்து வரும் நாட்களில் அதனை நாம் தீர்த்துக் கொள்வோம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 16ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கட்சியினை மறுசீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி தேர்தல் வெற்றியை தொடர்ந்து, மகிந்த ராஜபக்ச தலைமையிலா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ளதை அடுத்து, எதிர்க்கட்சி தலைவர் குறித்தும் தற்போது, சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்களை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கோரி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என மற்றுமொரு தரப்பு கோரி வருகின்றது.

இதனால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அந்த விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவிடம் ஊடகவிலாளர்கள் கேள்வியெழுப்பினர்,

இதற்கு பதிலளித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“அரசாங்கம் அமைத்து இன்னும் 10 நாட்களே ஆகின்றன. எதிர்க் கட்சித் தலைமையை தீர்மானித்துக் கொள்ள அவசரம் ஏதும் இல்லை. ஏன் அவசரப்படுகின்றீர்கள் எனவும்” அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.