விடுதலைப் புலிகளின் தலைவரிடம் இருந்த சிந்தனைகளும், தூர நோக்கும்! வேல்முருகன் நெகிழ்ச்சி

Report Print Kalaiyarasi Kalaiyarasi in அரசியல்

தமிழகத்திலுள்ள 7 கோடி தமிழ் மக்களிடம் இல்லாத ஒழுக்கம் சிந்தனை எதிர்கால நோக்கு என்பன தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனிடம் இருக்கின்றது என வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீர நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஈகைச்சுடர் ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தமிழீழ தேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரினால் உருவாக்கப்பட்ட பேரியக்கம் ஒழுக்க விழுமியங்களின் மிகவும் சிறந்து விளங்கியது. அதன் காரணமாக அவ்வியக்கம் பெரும் மதிப்பினை பெற்று பிரகாசித்தது.

இலங்கை நாட்டின் சிங்கள ராணுவம் எத்தனை தமிழ் பெண்களின் கற்பை சூறையாடி சீர்குலைத்து அவர்களின் வாழ்வை சீரழித்தார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் எந்த சிங்கள பெண்களையும் கற்பழித்து சூரையாடவில்லை என்பதனை இந்த உலகமே அறியும்.

சிங்கள இனவெறி பிடித்த சிங்கள தேசம் உலகத்தில் தடை செய்யப்பட்டபொஸ்பரஸ் குண்டுகளையும் கொத்துக் குண்டுகளையும் ஆட்லெறி குண்டுகளையும் சரமாரியாக பொழிந்து தமிழினத்தை அழித்து நாசமாக்கிய பெருமை சிங்கள தேசியத்திற்கே உரியது.

தன்னை நேசித்த மண்ணுக்காக தன்னை நேசித்த உறவுகளுக்காக தன் உயிரை அர்ப்பணம் ஆக்கிய ஒரு பெரிய உயிர் கொடைஇயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் காணப்பட்டது என்றார்.