இலங்கையிலுள்ள தூதரகங்கள் அச்சத்தில்! முன்னாள் அமைச்சர் தகவல் - சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Varun in அரசியல்

இலங்கையிலுள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தின் மீது தற்போதைய அரசாங்கம் கைவைத்துள்ளதால் இங்குள்ள முழு நாடுகளினதும் தூதரகங்களும் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இந்த விடயத்தை கூறியுள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு பத்திரிகையொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இன்னும் பல செய்திகளுடன் இன்றைய பத்திரிகைகளின் கண்ணோட்டம்,