இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் கடத்தப்பட்ட பெண்! விசாரணைகள் தீவிரம்

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய பெண் அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு வெளிவிவகார அமைச்சின் சுவிஸ் தூதரகத்தின் முழுமையான ஆதரவை கோரியுள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜேர்மனுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன ஹெட்டிஆராச்சி சுவிஸிற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி கொழும்பு சுவிஸ் தூதரகத்தின் அதிகாரியை கடத்தி செல்லப்பட்டு சில மணி நேரங்களில் விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கவில்லை என்றாலும் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அதற்காக சிசிடீவி காட்சிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகளிடம் அறிவித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.