முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Report Print Kanmani in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த அந்தோனி ஜெயமவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியிருந்த நிலையில் அவரது தீர்மானத்திற்கு எதிராக நேற்று மகளிர் அமைப்பொன்று உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு வழங்க கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ள போதிலும் கொலை வழக்கில் மரணதண்டனை விதித்திருக்கும் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கப்பட்டமை மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த மனுவில் சட்டமா அதிபர், சிறைச்சாலை ஆணையாளர், குடிவரவு மற்றும் குடியகழ்வு கட்டுப்பாட்டாளர், அந்தோனி ஜெயமஹ உள்ளிட்ட 10 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.