அரசாங்கம் “நான் நல்லப் பிள்ளை” பாத்திரத்தில் நடிக்கின்றது - ஜே.வி.பி

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் சிறந்த நடவடிக்கைகளை அடுத்த பொதுத் தேர்தலின் பின்னரும் மக்கள் எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

பதுளை, ஹலி-எல பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

மக்கள் எந்தளவுக்கு வறுமை நிலைமைக்கு செல்கிறார்களோ அந்த அளவுக்கு எமது நாட்டு அரசியல்வாதிகளுக்கு இலாபம் மட்டும் இலகுவானது.

அத்துடன் நாட்டின் இனவாத புண் இருக்கும் வரை அதனையும் விற்பனை செய்வது இலகுவானது. இது மிகவும் துரதிஷ்டவசமானது.

நாங்கள் கூறுவதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. எதிர்காலத்திலாவது மக்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய அரசாங்கம் தற்போது “நான் நல்லப் பிள்ளை” என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறது. அடுத்த பொதுத் தேர்தலே இந்த நடிப்புக்கு காரணம்.

69 லட்சம் வாக்குகளை பெற்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவாகி உள்ளார். அவரை வாழ்த்துகிறேன்.

வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும். வாக்குறுதிகளை மீறி செயற்பட்ட எந்த சந்தர்ப்பத்திலும் அதனை விமர்சிக்க தயாராக இருப்பதாகவும் வித்தியாரத்ன குறிப்பிட்டுள்ளார்.