ராஜித தப்பிச் செல்ல தயாராகி வருவதாக கிடைத்த தகவலை அம்பலப்படுத்தும் ரோஹித்த

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக கடமையாற்றிய ராஜித சேனாரத்ன, இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல தயாராகி வருவதாக ராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இருதய நோய்க்கு சிகிச்சை பெற போவதாக கூறி சிங்கப்பூர் சென்று அங்கிருந்து வேறு ஒரு நாட்டுக்கு தப்பிச் செல்ல தயாராகி வருவது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ராஜித சேனாரத்ன நாட்டில் இருந்து தப்பிச் செல்வதை காண்பிக்க வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து ராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளதாக தெரிவித்து சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.