பதவியில் இருந்து நீக்கப்படும் கொழும்பு மாநகர மேயர் ரோசி..??

Report Print Jeslin Jeslin in அரசியல்

கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரோசி சேனாநாயக்க மீது தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பயனற்ற நிர்வாகத்தின் காரணமாக நகரசபை நிர்வாகம் மோசமடைந்துவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவரை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னர் அப்பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்த ஒருவரையே நியமிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.