வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இந்த விஜயம் ஒரு சான்றாகும்! நரேந்திர மோடி மகிழ்ச்சி

Report Print Kanmani in அரசியல்

இந்தியாவிற்கு முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை இன்று மேற்கொண்டு வருகை தந்த இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கை - இந்திய வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இந்த விஜயம் ஒரு சான்றாகும் அதேநேரம் எமது பிணைப்பை வலுப்படுத்தவும், நல்லுறவை பலமூட்டவும் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய உடனான சந்திப்பின் பின்னர் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.