மங்கள மற்றும் ரஞ்சனின் கருத்துக்களால் கோட்டாபய வென்றார் என்பது ஏற்க முடியாது! நளின் டி சில்வா

Report Print Steephen Steephen in அரசியல்

மங்கள சமவீர மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரின் கருத்துக்கள் காரணமாகவே கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக பௌத்த பிக்குகள் மற்றும் ஐ.தே.கட்சியின் சிலர் வெளியிடும் கருத்துக்கள் மூலம் சிங்கள பௌத்த கருத்தியலை ஏற்படுத்த எடுத்த முயற்சி குறைத்து மதிப்பிடப்படும் என பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய சிந்தனை (காலம்) பேஸ்புக் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

மங்கள சமரவீர மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் பௌத்த பிக்குகளுக்கு மற்றும் பௌத்த சாசனத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்திய காரணத்தினாலேயே ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி தோல்வியடைந்ததாக பௌத்த சங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.

ஆசு மாரசிங்க மற்றும் அகில விராஜ் காரியவசம் போன்றோர் பெயர்களை குறிப்பிடாது இப்படியான கருத்தை வெளியிட்டிருந்தனர். இவற்றால் மாத்திரம் தோல்வி ஏற்பட்டது என்றால் அது மிகவும் பயங்கரமானது.

மங்கள மற்றும் ரஞ்சனின் ஆகியோரின் கருத்துக்கள் காரணமாக கோட்டாபய வெற்றி பெற்றார் என்று கூறுவது அவரது வெற்றியை கொச்சைப்படுத்துவதாகும்.

சிங்கள பௌத்த எழுச்சி ஏற்பட்டு, சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரம் கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. இந்த வெற்றி ரஞ்சன் மற்றும் மங்களவினால் கிடைத்தது என்று கூறுவது சிங்களவர்கள் பலவீனமானவர்கள் என்று அர்த்தப்படுத்தப்படும்.

இது சிங்களவர்களால் சிந்திக்க முடியாது, கருத்தியல் தொடர்பான புரிதல் இல்லை. கருத்து மோதல்கள் பற்றி சிந்திப்பதில்லை என்ற உணர்வை ஏற்படுத்தும் எனவும் பேராசிரியர் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.