எதிர்க்கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியம்! அஜித் பீ. பெரேரா

Report Print Steephen Steephen in அரசியல்

வலுவான எதிர்க்கட்சியை கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்கு புதிய தலைமைத்துவம் அவசியம் என பெரும்பான்மையானோர் நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுனமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

ஐக்கிய தேசியக் கட்சிக்கு உடனடியாக புதிய தலைமைத்துவம் அவசியம் என்பதை முழு நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமாயின் கட்டாயம் இது நடந்ததாக வேண்டும்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினைக்கு துரிதமான தீர்வுகாண வேண்டும்.

அத்துடன் எந்த கட்சிக்கும் அதிகமான பலத்தை வழங்கக் கூடாது. அப்படியான பலத்தை வழங்குவது என்பது குடிமக்களின் உரிமையை வரையறுக்கும் நடவடிக்கையாகும் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers