சஜித்தை விட ரணிலே எதிர்க்கட்சி தலைவராக இருக்க தகுதியானவர்!

Report Print Murali Murali in அரசியல்

எதிர்க்கட்சி தலைவராக செயற்பட கூடிய தகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கே இருப்பதாக நவ சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“எதிர்கட்சி தலைவராக செயற்படுவதற்கு சஜித் பிரமேதாசவை விட ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவர். ஏனெனில் ரணில் விக்ரமசிங்க ஒரு லிபரல் வாதி என்பதுடன் சிறந்த கல்விமானும் ஆவார்.

சர்வதேசத்தில் அவருக்கு நல்ல பெயர் இருக்கின்றது. அதனால் எதிர்கட்சி தலைவராக ரணில் செயற்படுவதையே நாம் விரும்புகின்றோம்.

சஜித் பிரமதாசவை பொறுத்தமட்டில் அவர் தேசிய பிரச்சினைகள் தொடர்பாக சுயகருத்துக்களை வளர்த்துக் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில், எதிர்வரும் காலங்களில் சஜித் பிரமதாச சிறந்த தலைவராக செயற்படுவார் என்று நாம் எண்ணுகின்றோம்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபயவின் செயற்பாடுகளை பார்கின்ற போது எதிர்வரும் காலங்களில் மக்கள் பாசிசவாத ஆட்சிமுறை என்றால் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.