முக்கிய விவாதத்தின் போது பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்த பெண் உறுப்பினர்கள்!

Report Print Varunan in அரசியல்

கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வில் முக்கிய விடயம் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கும் போது பெண் உறுப்பினர்கள் முகநூல் பயன்படுத்திக் கொண்டிருந்தமை விசனத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வு நேற்று மாலை வியாழக்கிழமை(28) கல்முனை நகர மண்டபத்தில் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற போது கூட்டறிக்கை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற வண்ணம் இருந்தன.

இந்நிலையில் சபையில் இருந்த பெண் உறுப்பினர்கள் முகநூல் பயனாளிகளாக மாறி சக உறுப்பினர்களுடன் அளவளாடிக்கொண்டிருந்தனர். இது தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது முகநூல் பயன்படுத்திக் கொண்டிருப்பது எத்தகைய நிலைப்பாடு என கேள்வி எழுப்பட்டுள்ளது.