கோட்டாபயவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக செயற்பட கடமைப்பட்டுள்ளோம்: லக்ஷ்மன் யாபா அபேவர்தன

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக நாம் செயற்பட கடமைப்பட்டுள்ளோம் என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

சமூக இணையத்தளங்களுக்காக அமைச்சுக்குள் பிரிவொன்றை எற்படுத்தி செயற்படுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் சிறிதளவேனும் குறைக்கப்படமாட்டாது. எந்தவித பாதிப்புக்கும் இடமளிக்கப்பட மாட்டாது. மக்களுக்காக முன் நிற்கும் ஊடக நிறுவனங்களில் அரசியல் பழிவாங்கலுக்கு இடமளிக்கப்படமாட்டாது.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதி மொழி ஒன்றை வழங்கினார். அதற்கு அமைவாக ஊடக துறை அமைச்சராக செயற்பட்டேன். அன்று முதல் 4 வருட காலம் மிகவும் சிரமமான காலப்பகுதியில் செயற்பட்டேன்.

ஊடகத்துறை அமைச்சிற்கு எல்.ரி.ரி.ஈ யினால் கூட அச்சுறுத்தல் இருந்தது. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சராக இது விரிவடைந்துள்ளது. இந்த அமைச்சில் இராஜாங்க அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்பதை இட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றும் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக நாம் செயற்பட கடமைப்பட்டுள்ளோம்.

ஜனாதிபதி முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார். அது எமக்கு எடுத்துக்காட்டாகும். மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் இவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும். கொள்கை பிரகடனத்தில் ஊடகம் தொடர்பாக உள்ள அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும். ஊடக சுதந்திரம் உண்டு.

பிவிருத்தியில் மேற்கொள்ளப்படும் நடைமுறை தொடர்பாக பொது மக்களுக்கு ஊடகங்கள் தெளிவுபடுத்தும் என்று நம்புகின்றேன் என்றார். இந்த நிகழ்வில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மற்றும் ஊடகத்துறை அமைச்சிற்கு உட்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.