ஜனாதிபதி கோட்டபாயவும், பிரதமர் மஹிந்தவும் எடுத்துள்ள திடீர் முடிவு!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் வசிப்பதனை தவிர்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளனர்.

கடமை நடவடிக்கைகளுக்கு மாத்திரம் உத்தியோகபூர்வ மாளிகையை பயன்படுத்துவதற்கு இருவரும் தீர்மானித்துள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய ஜனாதிபதி தற்போது வசிக்கும் நுகேகொடை, மிரிஹானவில் அமைந்துள்ள வீட்டிலும், பிரதமர் கொழும்பு 7 விஜேராம மாவத்தையில் உள்ள வீட்டிலும் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

அலரி மாளிகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சமய வழிப்பாடுகள் நடைபெற்ற பின்னர் பிரதமர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

எனினும் அடுத்த வாரம் தனது உத்தியோகபூர்வ கடமைகளை அலரி மாளிகையில் ஆரம்பிப்பதற்கு பிரதமர் திட்டமிட்டுள்ளார்.