புதிய அரசாங்கம் மிகவும் கஷ்டமான நிலைமையில் இருக்கின்றது -வாசுதேவ நாணயக்கார

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமாக பெரும் தொகை நிதி செலுத்த வேண்டியுள்ளதால், புதிய அரசாங்கம் மிகவும் கஷ்டமான நிலைமையில் இருப்பதாக நீர் வழங்கல் வசதிகள் ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் நேற்று கடமைகளை பொறுபேற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய அரசாங்கம் மிகவும் கஷ்டமான நிலைமையில் இருப்பது எமக்கு தெரியும். வெளிநாடுகளுக்கு பெருந்தொகை பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக எமது பிரதமரின் செயலாளர் பிரியத் பந்து என்னிடம் கூறினார்.

கடந்த அரசாங்கம் கடனை திருப்பி செலுத்தவில்லை. பெருந்தொகை பணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிலைமையில், என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா, கம்பெரலிய எனக் கூறி கடந்த அரசாங்கம் பலவிதமான செலவுகளை செய்தது.

புதிய அரசாங்கத்திற்கு இப்படியான பிரச்சினை இருக்கின்றது. இந்த பிரச்சினையை தீர்க்க அமைச்சின் செயலாளர்களுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.