அரசியலிலிருந்து ஓய்வு பெறும் ரணில்! தலைமைப் பதவியில் கரு ஜயசூரிய

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்குவதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கிய விட்டு அரசியலிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் ரணில் குறிப்பிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

தற்போது ஓய்வாக நேரத்தை செலவிடுவதற்கு அவசியம் உள்ளதாக கூறும் ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது தனக்கு 75 வயதாகிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாத்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அர்ப்பணிக்க கூடிய தலைவர்கள் எதிர்வரும் காலங்களில் அவசியம் என ரணில் மேலும் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.