ஆட்சி மாறினாலும் சுரக்‌ஷ காப்புறுதித் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

Report Print Banu in அரசியல்

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சுரக்‌ஷ காப்புறுதித் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் தனது கடமைகளைப் ​பொறுப்பேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த சுரக்‌ஷ காப்புறுதித் திட்டம், தொடர்ந்து வழங்கப்படும் அதனை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை.

2020இல், பாடசாலையின் முதலாவது தவணைக் காலம் தொடங்கி இரண்டு வாரத்துக்குள், மாணவர்களுக்கான சீருடைக்குரிய வவுச்சர்கள், பாடசாலைகளில் வைத்தே விநியோகிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.