நாட்டில் திடீரென ஏற்பட்டுள்ள குழப்பங்கள்! ஜனாதிபதியிடம் சஜித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Report Print Vethu Vethu in அரசியல்

வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு எதிராக செயல்பட வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

3 விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அவதானத்திற்கு உட்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சஜித் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நடந்துக் கொண்டிருக்கும் சில சம்பவங்கள் அமைதியான சமூகத்திற்குள் பீதியை ஏற்படுத்த காரணமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியை கடத்தி சென்ற சம்பவமானது இலங்கையின் இராஜதந்திர வரலாற்றிகுள் கருப்பு புள்ளியாகியுள்ளதுடன் சர்வதேச ரீதியில் இலங்கை மீது பாரிய அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏராளமான புகழ்பெற்ற மற்றும் திறமையான பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பழி வாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் பலர் மீது தற்போது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை வெற்றி பெற்ற கருத்து சுதந்திரம், தகவல் அறியும் உரிமைக்கு எதிரான இராஜதந்திர செயற்பாடாகியுள்ளது.

நாட்டை பாதுகாத்தல், பழிவாங்கல்களுக்கு முற்றிப்புள்ளி வைத்தல், பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் இலங்கையை, உலகில் உயரத்தில் வைக்கும் வாக்குறுத்திக்கமைய மக்கள் வழங்கிய ஆணையை சிதைக்கும் ரீதியில் செயற்படுவதென்பது வருத்தமளிக்கும் விடயமாகியுள்ளது.

பக்கச்சார்பற்ற, சட்டத்தை மதிக்கும் அதிகாரிகளை அரசியல் ரீதியாக துன்புறுத்துல், ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவைகள் 2015ஆம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையில் காணப்பட்ட இருண்ட காலமாகும்.

இந்த வருத்தமளிக்கும் நிலைமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட அவதானத்திற்கு கொண்டு செல்லுமாறு சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டுள்ளார்.

வாக்குறுதியளித்த சுதந்திரத்தை நாட்டிற்கு உருவாக்குமாறும், மேல் குறித்த விடயங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகளை நடத்துமாறும், ஏனையவர்களிடம் மேற்கொள்ளப்படும் பழிவாங்கும் படலத்தை நிறுத்திக் கொள்ளுமாறும் சஜித் கேட்டுக்கொண்டுள்ளார்.