ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வவுனியாவில் கூடுகின்றது

Report Print Theesan in அரசியல்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு நாளை வவுனியாவில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமகால அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே மத்தியகுழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் 10 மணிக்கு கூடவுள்ள மத்தியகுழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் மாநாடும் இடம்பெறவுள்ளது.