எஸ்.பி, திலங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டமை தவறான செயல் என கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நபர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்த முறைமையே ஒழுக்கவிரோத செயல் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கெவிந்து குமாரதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி.திஸாநாயக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமதிபால போன்றோர் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததுடன் பின்ன தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் புதிய அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.