மேல் மாகாணத்தில் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

Report Print Steephen Steephen in அரசியல்

மேல் மாகாணத்திற்குள் இருக்கும் பிச்சைக்கார்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகம் மேல் மாகாணத்தின் அனைத்து தலைமையக பொலிஸ் நிலையத்திற்கும் வழங்கிய ஆலோசனைக்கு அமைய பிச்சைக்கார்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை காலிமுகத்திடல், கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்து 700 பிச்சைக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் அம்பலாதோட்டை - ரிதியகம யாசகர் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

அப்புறப்படுத்தப்பட்ட பிச்சைக்காரர்களில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களும் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார், வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து காலிமுகத்திடலை துப்பரவு செய்யும் நடவடிக்கைகளிலும் இன்று ஈடுபட்டனர்.

காலை 8 மணி முதல் 10 மணி வரை இவர்கள் காலிமுகத்திடலை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் திடலில் காணப்பட்ட குப்பை கூலங்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை ரயில்களில் பிச்சை எடுக்கும் யாசகர்கள் மற்றும் அனுமதியின்றி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாக உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயில்களில் பிச்சை எடுக்கும் நபர்கள் மற்றும் சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.