அரசியல்வாதிகளே இன, மத, மொழி ரீதியாக மக்களை பிரிக்கின்றார்கள்: மஸ்தான் எம்.பி

Report Print Thileepan Thileepan in அரசியல்

அரசியல்வாதிகளே இன, மத, மொழி ரீதியாக மக்களை பிரிக்கின்றார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று எமது நாடு இன, மத, மொழி, கட்சி ரீதியாக பிரிந்துள்ளது. இவ்வாறு மக்களை பிரிப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளே. அதை தடுத்து நிறுத்தி இலங்கை மக்கள் என்ற அடிப்படையில் நாங்கள் ஒற்றுமையாக வாழக் கூடிய ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.

விளையாட்டு நிகழ்வுகளின் மூலம் பல தரப்பட்டவர்களும் பழகுகின்றனர். அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுகிறது. இளைஞர்கள் ஒரு விடயத்தை சொன்னால் அவர்கள் உடனடியாக அதில் ஈர்க்கப்படுகிறார்கள். அதை வைத்து தான் அரசியல்வாதிகள் இனவாதம், மதவாதம் என்பவற்றை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் விளையாட்டு நிகழ்வின் மூலம் இளைஞர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு நல்ல சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் ஏற்படுத்த முடியும். எனவே விளையாட்டு நிகழ்வுகளை ஊக்கப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன், உருள் பந்து வீரர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.