மீண்டும் அரசியலுக்குள் வருவேன்! அதை யாராலும் தடுக்க முடியாது: மைத்திரிபால சிறிசேன

Report Print Jeslin Jeslin in அரசியல்

எனது அரசியல் வாழ்க்கை இன்னும் முடிவடையவில்லை, என்னால் முடியும் வரை அரசியலில் தொடர்ந்து இருப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்நறுவையில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியாக இல்லாததால் தனது அரசியல் வாழ்க்கையும் முடிந்துவிட்டதாக சிலர் கருதுகின்றனர். அரசியலில் மீண்டும் வருவேன் என நம்புகின்றேன்.

தனது இறுதி மூச்சை சுவாசிக்கும் வரை நாட்டிற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்வேன், அதனை யாரும் தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers