பொதுத்தேர்தலில் மொட்டா, கதிரையா? அரசாங்கத்திற்குள் வெடித்தது மோதல்!

Report Print Ajith Ajith in அரசியல்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையிலான மிக முக்கிய கலந்துரையாடலொன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இரு தரப்புக்குமிடையில் நடைபெறும் முதலாவது சந்திப்பிலேயே அடுத்த பொதுத்தேர்தல் உட்பட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் மொட்டு சின்னத்திலும், பொதுத்தேர்தலில் கதிரை சின்னத்திலும் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே இரு தரப்புக்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது.

எனினும் ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர், பொதுத்தேர்தலிலும் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவோம் என மஹிந்த அணி உறுப்பினர்கள் சிலர் அறிவிப்பு விடுத்து வருகின்றனர்.

இதனால் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையிலேயே இவ்வாறானதொரு சந்திப்புக்கு இரு தரப்புக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers