வட, கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டிக்கு இன்று பயணம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் , அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

அதன் பின்னர் வடக்கு, கிழக்கிலிருந்து மேலதிக இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்னவென்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தேவையான இடங்களில்தான் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே, எந்தவொரு முகாமையும் அகற்றவேண்டிய தேவை இல்லை.

இராணுவம் யாருக்கும் சுமையாக இல்லை. அதனால் மக்களுக்கு சிறப்பான சேவையே இடம்பெறுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.