பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

Report Print Kamel Kamel in அரசியல்

பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் மாக்டும் ஷா மஹ்மூட் குவாரிஸி (Makhdoom Shah Mahmood Qureshi) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாளைய தினம் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்தியாவிற்கு தனது முதலாவது அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.