கடத்தல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

கடத்தல் சம்பவம் தொடர்பில் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடயைமாற்றிய உள்நாட்டு பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆணைக்குழு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரட்னவிற்கு மனித உரிமை ஆணைக்குழு கடிதம் மூலமாக அறிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

துரித கதியில் பக்கச்சார்பற்ற விசாரணகைள் நடத்தப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாதது எனவும் சட்டம் ஒழுங்கு துறை தொடர்பிலான நம்பிக்கையை உருவாக்குவதற்கு இது உதவும் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைமை அதிகாரி தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் பணியாளருக்கு நியாயம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.