தவறுகள் திருத்திக் கொள்ளப்படும்! இந்தியாவில் ஜனாதிபதி கோட்டபாய வழங்கிய வாக்குறுதி

Report Print Vethu Vethu in அரசியல்

கடந்த காலங்களில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான தவறான புரிதல்கள் தவிர்த்து செயற்பட தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு உண்மையுள்ள மற்றும் முன்னுரிமை வழங்கி தான் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

சீன முதலீட்டாளர்கள் மாத்திரமன்றி பிராந்திய நாடுகளை சேர்ந்தவர்களும் இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாள் விஜயமாக இந்தியாவிற்கு சென்ற கோட்டாபய ராஜபக்ச ஹிந்து செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நாம் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து இந்தியா அச்சம் கொள்ளத் தேவையில்லை.

துறைமுக அபிவிருத்தி மற்றும் திருகோணமலை எரிபொருள் கொள்கலன் தொடர்பில் 2017ஆம் ஆண்டு இந்தியாவுடன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்திகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபயவிடம் வினவிய போது,

“எங்களுக்கு சில சில முறைகளை மாற்றிக் கொள்ள கூடிய வர்த்தகங்கள் உள்ளது. நான் இன்னமும் திட்டங்கள் குறித்து ஆராயவில்லை. இந்திய பிரதமரின் இலங்கை வியத்தின் போது மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றேன். அதே போல் இலங்கைக்கு முக்கியமான அனைத்து திட்டங்களையும் விரைவில் மேற்கொள்ளவதாக நான் வாக்குறுதியளிக்கின்றேன்” என ஜனாதிபதி கோட்டபாய மேலும் தெரிவித்துள்ளார்.