மோடியின் ஆலோசனைக்கு கட்டுப்படும் கோட்டாபய தரப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும், 13ஆம் திருத்தத்தில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதால் அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றிருக்கும் நிலையில் நேற்று முன்தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அதன் பின்னர் ஹைதராபாத் இல்லத்தில் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மோடி, 'இலங்கையில் நல்லிணக்க செயன்முறைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும், தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் என்றும் நம்புவதாகவும் இலங்கையின் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதும் உள்ளடங்குவதாகப் பிரத்தியேகமாகக் குறிப்பிட்டார்.

இந்திய பிரதமரின் இந்த வலியுறுத்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டு என்பது தொடர்பில் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.