ஜனாதிபதி கோட்டாபயவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

Report Print Vethu Vethu in அரசியல்

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறந்த முறையில் விருந்தோம்பலை மேற்கொண்டமையினால் ஜனாதிபதி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

“இலங்கையின் முறைபடி அளிக்கப்பட்ட விருந்தோம்பலுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்க்கு நன்றிகள். இலங்கையின் கொடியை ஏந்திச் செல்லும் நமது தேசிய அடையாளமானது நம் நாட்டை மீண்டும் பெருமைப்படுத்தி பெயர் வாங்க செய்யும் என நம்புகின்றேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்த பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது விஜத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.