மாதாந்த எரிபொருள் விலை மீளாய்வு திட்டம் விரைவில் முடிவு

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் கடைபிடிக்கப்பட்டு வந்த மாதாந்த எரிபொருள் விலை மீளாய்வு திட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

ஏரிசக்தித்துறைக்கான புதிய அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபன உறுதிமொழிக்கு ஏற்பவே இந்த முடிவு எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலைக்கான மாதாந்த மீளாய்வுத்திட்டம் காரணமாக ரூபாவின் சமநிலை மற்றும் பணவீக்கம் என்பன ஒரே தன்மையில் பேணப்பட்டு வந்தன.

எனினும் 2018ஆம் ஆண்டு இந்த மீளாய்வையும் தாண்டி பெற்றோலிய கூட்டுத்தாபனம் 102 பில்லியன் ரூபாய்கள் நட்டமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.