இனப்பிரச்சினைக்கு மாற்று யோசனை! ஜனாதிபதி கோட்டாபய தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

இனப்பிரச்சினை தீர்வுக்காக 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துள்ளார்.

எனினும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராயப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுடில்லியில் பிரதமர் மோடியுடன் இடம்பெற்ற சந்திப்பின்பின்னர் தெ ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

13இன் முழுமைக்கு பதிலாக வடக்குகிழக்கை அபிவிருத்தி செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். வடக்குகிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு எந்த ஒரு சிங்களவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

13வது திருத்தத்தின்படி காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமானால் அது பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். முன்னர் பல வருடங்களாக அதிகாரப்பரவலாக்கம் தொடர்பாக பேசப்பட்டபோதும் வடக்கு கிழக்கில் எதுவும் நடக்கவில்லை.

இந்தநிலையில் நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் முதலீட்டாளர்களை வரவழைக்கமுடியாது என்றும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.