கொழும்பு மாநகர மேயர் ரோசி மீது முறைப்பாடு

Report Print Ajith Ajith in அரசியல்

கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

100 மில்லியன் ரூபா பெறுமதிக்கொண்ட, கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான கட்டிடத்தை 30 மில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டே அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபையின் உறுப்பின் சேர்மிளா கோணவில இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

இதனையடுத்து ரோசி சேனாநாயக்க மீது 4 மணித்தியால விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கோணவில தெரிவித்துள்ளார்.