கட்சியை காப்பாற்ற உதவுகள் - சஜித்திடம் ரணில் விடுத்த கோரிக்கை

Report Print Vethu Vethu in அரசியல்

பதவிகள் ஒன்று வேண்டாம் எனினும் ஐக்கிய தேசிய கட்சியை காப்பாற்ற இருக்கும் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி மற்றும் கட்சித் தலைவர் பதவிகளை வழங்க தான் எதிர்க்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற ரீதியில் கட்சியின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் போது அதற்காக தெளிவான எதிர்காலம் ஒன்று காணப்பட வேண்டும்.

அதற்கமைய குறித்த இரண்டு பதவிகளையும் வழங்குவதன் மூலம் கட்சியை வலுப்படுத்துவதற்கு உள்ள திட்டங்கள் என்ன? என ரணில் சஜித்திடம் கேட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுக்கும் பங்காளி கட்சியின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி மற்றும் கட்சி தலைமைத்துவத்தை வழங்குவதற்கு முன்னர் குறித்த திட்டங்களை வெளிக்காட்டுமாறு சஜித் பிரேமதாஸவிடம், ரணில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய புதிய திட்டங்களுடன் இரண்டு பதவிகளையும் பெறுவதற்கு சஜித் தயாராகி வருகின்றார். வெகு விரைவில் இந்தத் திட்டங்களுடன் கட்சி தலைமைகளை சஜித் சந்திக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.

Latest Offers