பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Report Print Malar in அரசியல்

சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது. மேலும்,

மக்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனங்களை செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுரை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை கருத்திற்கொண்டு பாதுகாப்பு அமைச்சும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையமும் ஒன்றிணைந்து அனர்த்தங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும் மக்களின் தேவையை கருத்திற்கொண்டு அவற்றிற்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.