சுவிற்சர்லாந்து தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம் நிரூபிக்கப்படவில்லை: மஹிந்த

Report Print Kamel Kamel in அரசியல்

சுவிற்சர்லாந்து தூதரக பணியாளர் கடத்தல் சம்பவம் தொடர்பிலான விவகாரம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடத்தல் சம்பவம் தொடர்பில் ஜப்பான் தூதரக சீ.சீ.ரீவீ காணொளிகளை பரிசோதனை செய்ததன் மூலம் இந்த விடயம் தொடர்பில் பதிலளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தேவின் நினைவு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.