கனடா உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் இடையில் சந்திப்பு

Report Print Malar in அரசியல்

கனடா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது கனடா உயர்ஸ்தானிகர் தமது நாட்டின் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை சீனா அரசாங்கத்தின் விசேட பிரதிநிதியும் சீனா வெளிவிவகார அமைச்சின் ஆசியா பிராந்தியத்திற்கான பணிப்பாளர் நாயகமாக செயற்படும் முன்னாள் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜியங்காவோவும் இன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.