புதிய எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பெயரை ரணில் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்

Report Print Varun in அரசியல்

புதிய எதிர் கட்சி தலைவராக நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவை நியமிப்பதற்கு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தமது விருப்பத்தை தெரிவித்துள்ளார் என அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவே இத்தருணத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பலர் முன்மொழிந்துள்ளனர்.

எதிர் கட்சி தலைவர் பதவி குறித்து ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக சிறந்த முடிவினை எடுப்பதற்காக கட்சினர் ஒன்றுகூடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர்.

அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட இரண்டு பேச்சுவார்த்தைகளுக்கு முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச சமூகமளிக்கவில்லை.

இதனை கருத்தில் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் எதிர்கட்சி பதவிக்கு நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய நியமிக்கப்பட்டால் அவரது சபாநாயகர் பதவியில் இருந்து அவர் விலக நேரிடும்.