முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம அரசியலிலிருந்து ஓய்வு

Report Print Kamel Kamel in அரசியல்

அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏதேனும் ஓர் காலத்தின் பின்னர் அரசியலிலிருந்து ஒதுங்கிவிட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் அமுனுகம கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.