நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! சிறப்பு வர்த்தமானி வெளியீடு

Report Print Ajith Ajith in அரசியல்

நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தும் வர்த்தமானி அறிவித்தல், அச்சிடப்படுவதற்காக அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றம் நாளை கூட்டப்படவிருந்த நிலையிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவுள்ளது.

சம்பிரதாயப்படி நாடாளுமன்ற அமர்வுகளை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆரம்பித்த வைப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சபாநாயகர் அக்கராசனத்தில் ஜனாதிபதி அமர்ந்து சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைப்பார்.

இதேவேளை இடைக்கால அரசாங்கத்தின் சபை முதல்வராக தினேஸ் குணவர்த்தனவும், அரசாங்க அமைப்பாளராக மஹிந்த அமரவீரவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.