19ம் திருத்த சட்டத்தினை திருத்திக்கொள்ள ஆதரவளிப்போம் : ஐ.தே.க

Report Print Kamel Kamel in அரசியல்

19ம் திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் காணப்பட்டால் அவற்றை தீருத்திக் கொள்ள ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்குபற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியல்ல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

19ம் திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் அவை குறித்து பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 19ம் திருத்தச் சட்டமானது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் தனித்து கொண்டு வரப்பட்டது ஒன்றல்ல எனவும், அதற்கு ஒட்டு மொத்த நாடாளுமன்றமும் ஆதரவளித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers