19ம் திருத்த சட்டத்தின் ஊடாகவே நியமனங்களை கிரமமாக வழங்க முடிந்தது : ராஜித சேனாரட்ன

Report Print Kamel Kamel in அரசியல்

19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாகவே நியமனங்களை கிரமமான அடிப்படையில் வழங்க முடிந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அரசியல் நியமனங்கள் மட்டுமன்றி அரச சேவையின் நியமனங்களில் கூட சுயாதீனத்தன்மையை ஏற்படுத்த முடிந்தது. சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலம் இதனை செய்ய முடிந்தது.

உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமிக்கப்படுவது வரையில் இந்த முறைமை பின்பற்றப்பட்டது.

நிறைவேற்று அதிகாரத்திற்கு தேவையான வகையில் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த நாட்டிலேயே நல்லாட்சி அரசாங்கம் 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக இந்த மாற்றங்களை செய்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.