வெள்ளை வான் சாரதிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரின் விசாரணைகள் ஆரம்பம்!

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்ட வெள்ளை வான் சாரதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அவர்கள் இதனை அறிவித்துள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது ராஜபக்ச அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் புதிய ஆட்சியின் போது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது வெள்ளை வான் சாரதிகள் என்றுக்கூறி இரண்டு பேரை அவர் முன்னிலைப்படுத்தியிருந்தார்.

இந்தநிலையில் குறித்த செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக செம்மையாக்கப்படாத காணொளியை விசாரணைக்கு ஒப்படைக்குமாறு நீதிவான் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.