நாடாளுமன்ற அமர்வுகள் ஜனவரி மாதம் கூடும்

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி நாடாளுமன்றம் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இவ்வாறு தற்போதைய நாடாளுமன்றின் அமர்வுகளை முடிவுக்குக் கொண்டு வந்ததாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் நள்ளிரவுடன் நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைப்பதாகவும், புதிய கூட்டத் தொடர் எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி ஆரம்பமாகும் எனவும் வர்த்மானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.