ஜனாதிபதி கோட்டாபயவின் கருத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Report Print Ajith Ajith in அரசியல்

சிங்கள மக்களின் விருப்பங்களுக்கு எதிராக 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தமுடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கருத்தை திராவிட முன்னேற்றக்கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

இந்திய இணையம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தம்முடன் கோட்டாபய நடத்திய சந்திப்பின்போது 13வது திருத்தம் முழுமையாக அமுல்செய்யப்படவேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார்.

எனினும் கோட்டாபய மாற்றுக்கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்ச அனைத்து இலங்கையர்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இலங்கை தமிழர்களின் நலன்காக்க இந்திய பிரதமர் தலையீட்டை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஸ்டாலின் கோரியுள்ளார்.

1956ம் ஆண்டு சிங்களம் மட்டும் என்ற கொள்கை கொண்டு வரப்பட்டபோது அதற்கு எதிராக தமது தந்தை கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு யோசனை கொண்டு வந்தமையை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.