ஜனாதிபதி கோட்டாபயவின் இந்திய விஜயம் இராஜதந்திர வெற்றி!

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்திய விஜயம் இராஜதந்திர ரீதியில் பாரிய வெற்றியை நாட்டுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் இரண்டு நாள் விஜயமாக இந்தியா செற்றிருந்தார்.

இந்த விஜயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு கூறியுள்ளார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்திய விஜயம் இராஜதந்திர ரீதியில் பாரிய வெற்றியை நாட்டுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. ஜனாதிபதி சாதாரண பயணிகள் செல்லும் வழியின் ஊடாகவே தமது பயணத்தை மேற்கொண்டார்.

அத்துடன், மீண்டும் அதே வழியிலேயே திரும்பிவந்தார். இந்நிலையில், பயணிகளுக்கு சிரமங்களின்றி பயணங்களை மேற்கொள்வதற்கான அனைத்து மறுசீரமைப்புகளும் துரிதமாக முன்னெடுக்கப்படும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.