இளைஞர், யுவதிகளை பாராட்டிய ஜனாதிபதி கோட்டாபய

Report Print Vethu Vethu in அரசியல்

நாட்டிலுள்ள வீதி மதில்களில் போஸ்டர்களை ஒட்டி அசுத்தப்படுத்தியதை சுத்தப்படுத்தி மீண்டும் அதில் போஸ்டர்கள் ஒட்டாத வகையில் சுவர் ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செயற்பாட்டினை அவதானித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அத்துடன் அந்த இளைஞர்களுக்கு தனது நன்றியை தெரிவித்த ஜனாதிபதி தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றையும், பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

“நமது இளைஞர்களின் முயற்சி, தலைமைத்துவப் பண்பு, ஆக்கபூர்வமான சக்தி மற்றும் குழு முயற்சி போன்றவற்றால் நமது எதிர்காலத்தின் போக்கை மாற்றுவதற்கான ஒரு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது இந்த நேரிய சிந்தனையை ஆக்கபூர்வமான சக்தியாக வெளிக்கொண்டு வருவது உற்பத்தித்திறன் மிக்க கலாச்சாரத்திற்கு அவர்கள் தயாராக இருப்பதை வெளிப்படுத்துகின்றது. அவர்கள் நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஒரு வளமாகும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.